
தமிழ் புதல்வன் திட்டம் துவக்க விழா
தமிழ்நாடு அரசின் தமிழ் புதல்வன் திட்டத்தின் துவக்கவிழா இன்று நமது காமராஜ் கல்லூரியில் காலை 11 மணிக்கு கல்லூரி செயலர் திரு. P.S.P.K.J. சோமு அவர்கள் தலைமையிலும் முதல்வர் முனைவர் ஜ. பூங்கொடி முன்னிலையிலும் நடைபெற்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கோயம்புத்தூரில் தமிழ் புதல்வன் திட்டத்தை துவங்கியதை மாணவர்கள் காணொளி காட்சி வாயிலாக கண்டுகளித்தனர். இதனை அடுத்து தமிழ் புதல்வன் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு கல்லூரி செயலர் அவர்கள் ATM Card ஐ வழங்கினார்கள், நிகழ்ச்சியில் 127 மாணவர்களுக்கு ATM Card வழங்கப்பட்டது, மாணவர்கள் தமிழ் புதல்வன் திட்டம் மூலம் மாதம் ரூபாய் 1000 வழங்கிய தமிழ்நாடு முதல்வருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை கூறினார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ் புதல்வன் திட்ட அலுவலர்கள் முனைவர். பானுமதி மற்றும் முனைவர் கோபாலகிருஷ்ணன், அலுவலக கண்காணிப்பாளர் திரு. சரவணன், அலுவலக உதவியாளர் திரு. ராஜேஷ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.