
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – பொது நிர்வாகவியல் துறை
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 17.02.2024 அன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை ஏபிசி மகாலட்சுமி கல்லூரியில் நடைபெற்றது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர். இதில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மைய அலுவலகத்தினரின் அழைப்பின் பெயரில் பொது நிர்வாகவியல் துறை முதலாம் ஆண்டு மாணவர்கள் அவர்களுக்கு உதவும் வகையில் கலந்து கொண்டு தன்னார்வ பணியினை மேற்கொண்டனர்.