
தசரா 2023: கொலு பூஜை – Day 4
நமது காமராஜ் கல்லூரியில் தசரா – 2023 கொலு உற்சவ பூஜையின் நான்காம் நாள் (18 -10 -2023) வணிகவியல் துறை சார்பாக மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஐப்பசி தமிழ் மாத பிறப்பு மற்றும் சதுர்த்தியை முன்னிட்டு வணிகவியல் துறை மாணவ மாணவிகள் பொங்கலிட்டு வழிபட்டனர் மேலும் தங்களது தனித் திறமைகளையும் தலைமை பண்பு மற்றும் திறன் சார்ந்த களப்பணியை மேம்படுத்துவதாக இத்தகைய கல்லூரி விழாக்கள் இருப்பதாக மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.