
தசரா திருவிழா 2024 – Dept. of Mathematics & Computer Science
நமது காமராஜ் கல்லூரியில், தசரா திருவிழா 2024 நவ ராத்திரி கொலு உற்சவ விழாவினை முன்னிட்டு 04-10-2024 இரண்டாம் நாள் வெகு விமரிசையாக கணிதவியல் துறை மற்றும் கணினி அறிவியல் துறை மாணவ மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்களால் கொண்டாட பட்டது. மாணவிகள் வண்ண கோலங்கள் வரைந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பாரம்பரிய விளையாட்டான பானை உடைத்தல் உறியடி போட்டிகளை மாணவர்கள் நடத்தினர். ஆராய்ச்சி மாணவர்கள், ஆசிரிய பெரு மக்களுடன் இணைந்து மாணவ மாணவியர்கள் பொங்கலிட்டு நவராத்திரி இரண்டாம் நாளை கொண்டாடினர். இத்தகைய விழாக்கள் கல்லூரியில் மாணவர்கள் இடையே சகோதரத்துவம், ஒற்றுமை, ஒருங்கிணைந்து செயல் படுதல், தலைமை பண்புகள் வளர்த்தல் போன்ற நற் பண்புகளை வளர்ப்பதாக பங்கேற்ற மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.