
தசரா திருவிழா 2024 – Dept. of Botany & Physics
நமது காமராஜ் கல்லூரியில் தசரா திருவிழா 2024 ஐ முன்னிட்டு நவராத்திரி கொலு விழாவின் எட்டாம் நாள் (10- 10- 2024) தாவரவியல் துறை மற்றும் இயற்பியல் துறை சார்பில் கொண்டாடப்பட்டது. மாணவிகள் வண்ண கோலங்கள் வரைந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பக்தி பாடல்களை பாடியும், பொங்கல் வைத்தும் வழிபட்டனர். கும்மி ஆட்டம், தமிழகத்து நாட்டுப்புற முளை பாரி கும்மி கொட்டி, தனி திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும் கயிறு இழுத்தல், இசை சுற்று போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளை மாணவர்கள் நடத்தினர். விளையாட்டு துறை சார்பில், உடற் கல்வி இயக்குனர் உடன் இணைந்து மாணவ பொறுப்பாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். கல்லூரி முதல்வர் வழிகாட்டுதல் பேரில், மாணவ பிரதிநிதிகள் மிக சிறப்பாக நவராத்திரி கொலு விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.