
செந்தமிழ் இலக்கியப் பேரவை விழா – தமிழ்த்துறை
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தமிழ்த்துறை சார்பாக 17.08.2023 (வியாழக்கிழமை) அன்று செந்தமிழ் இலக்கியப் பேரவை விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் ஜ. பூங்கொடி அவர்களின் தலைமையில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா இனிதே தொடங்கியது. வணிகவியல் துறை மாணவி அ.மரீயம்பீவி வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் சாகித்ய அகாதெமி பால புரஸ்கார் விருது பெற்ற உதயசங்கர் அவர்கள் வாசிப்பின் சிறகுகள் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து இரண்டாமாண்டு கணிதவியல் துறை மாணவர் பாலபிரபு நன்றியுரை நல்கினார். விழாவின் நிகழ்ச்சிகளை புனிதா, பேச்சியம்மாள், அருண்குமார் ஆகிய மாணவர்கள் தொகுத்து வழங்கினார்கள். இவ்விழாவில் முதலாமாண்டு மாணவர்கள் 400 பேர் கலந்து கொண்டனர். விழாவின் ஏற்பாடுகளைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் செ. கஸ்தூரி அவர்கள் வழிகாட்டுதலின் பெயரில் தமிழ்த்துறைப் பேராசிரியர்களும் செந்தமிழ் இலக்கியப் பேரவை மாணவ உறுப்பினர்களும் சிறப்புடன் செயலாற்றினார்கள்.விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவடைந்தது.