
செந்தமிழ் இலக்கியப்பேரவை விழா
செந்தமிழ் இலக்கியப்பேரவை விழா 28/09/2022 அன்று காமராஜர் கல்வி அரங்கில் நடைபெற்றது. பசும்பொன்முத்து ராமலிங்கத்தேவர் கல்லூரி இணைப்பேராசிரியரான முனைவர் வ.ஹரிஹரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு “இதயம் கவர்ந்த இலக்கியச் சிந்தனைகள்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். முதலாமாண்டு வணிகவியல் துறையைச் சார்ந்த மாணவத்தலைவர் அ.மரியம் பீவி வரவேற்புரை வழங்க,நிகழ்ச்சியினை முதலாமாண்டு கணிதவியல் துறையைச் சார்ந்த மாணவர் ர.பாலபிரபு மற்றும் முதலாமாண்டு வணிகவியல் துறை மாணவி த.ஜனனியும் தொகுத்து வழங்கினார்கள்.முதலாமாண்டு விலங்கியல் துறையைச் சார்ந்த மாணவச் செயலர் கொ.பிருந்தா நன்றியுரை கூறினார்.முதலாமாண்டு அறிவியல் துறை மாணவர்கள் 225 பேர் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பயனடைந்தார்கள். விழா ஏற்பாட்டினைத் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.விழா நாட்டுப்பண்ணுடன் இனிதே முடிவடைந்தது.