
சுவர் இதழ் போட்டி – NSS Units: 54 & 56
இந்திய தேர்தல் ஆணையம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட தேர்தல் ஆணையம் இணைந்து நம் காமராஜ் கல்லூரியில் நாட்டுநலப்பணித்திட்டம் அணிஎண் 54 & 56 சார்பாக “சுவர் இதழ் போட்டி” (10-10-2023) செவ்வாய் கிழமை நடைபெற்றது. இதில் “வாக்களிப்பதன் முக்கியத்துவம்” என்னும் தலைப்பில் வாசகங்கள் எழுதும் போட்டி மாணவர்களுக்கு தாவரவியல் ஆய்வகத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.இப்போட்டியினை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் திரு.பா.ஆனந்த் (அணிஎண்-54) திரு.மா.அய்யனுராஜ் (அணிஎண்-56) ஆகியோர் போட்டியை ஒருங்கிணைத்து மாணவர்களை வழிநடத்தினர்.