Back
Home Events சிறப்பு விருந்தினர் விரிவுரை – தமிழ்த்துறை

சிறப்பு விருந்தினர் விரிவுரை – தமிழ்த்துறை

31.07.2023 அன்று காமராசர் கலை இலக்கியக் கழகமும், காமராஜ் கல்லூரி தமிழ்த் துறையும் (சுயநிதிப்பிரிவு) இணைந்து சிறப்பு விருந்தினர் விரிவுரை நிகழ்வை நடத்தினர். சோ.சோலைராஜா, இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவன் தொகுப்புரை ஆற்றினார்.தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழா இனிதே தொடங்கியது. ம.பாரதி கண்ணன், இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவன் வரவேற்புரை ஆற்றினார். துணை முதல்வர் முனைவர் அ. அருணாசல ராஜன் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.திலகவதி அவர்கள் வாழ்த்துரை ஆற்றினார். துணை முதல்வர் முனைவர் அ. அருணாசல ராஜன் அவர்கள் காமராஜ் மகளிர் கல்லூரி முதல்வரும், சிறப்பு விருந்தினருமான முனைவர் ம.வான்மதி அவர்களைக் கௌரவித்தார். சிற்றிலக்கியங்கள் உணர்த்தும் அறம் என்னும் தலைப்பில் காமராஜ் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் ம. வான்மதி அவர்கள் சிறப்புரையாற்றினார். பள்ளு இலக்கியம், அந்தாதி இலக்கியம், குறவஞ்சி இலக்கியம் பற்றி மாணவர்களுக்குத் தெளிவாக, விளக்கமாகக் கூறி மாணவர்களோடு கலந்துரையாடினார். மா.சீதாராமன், இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவன் நன்றியுரை கூறினார். தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு இந்நிகழ்வைச் சிறப்பித்தனர். நாட்டுப்பண்ணோடு விழா இனிதே நிறைவடைந்தது.

Date
Jul 31 2023
Expired!
Time
11:30 am
Location
Seminar Hall - Golden Jubilee Block
Other Locations

Leave A Reply