
சிறப்பு விருந்தினர் விரிவுரை – தமிழ்த்துறை
20.03.2023 அன்று காமராசர் கலை இலக்கியக் கழகமும், காமராஜ் கல்லூரி தமிழ்த்துறையும் (சுயநிதிப்பிரிவு) இணைந்து சிறப்பு விருந்தினர் விரிவுரை நிகழ்வை நடத்தினர். கா. முத்துலட்சுமி , இளங்கலைத்தமிழ் மூன்றாமாண்டு மாணவி தொகுப்புரையாற்றினார்.
தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழா இனிதே தொடங்கியது. தி.காளி ராஜா, இளங்கலைத்தமிழ் முதலாமாண்டு மாணவன் வரவேற்புரையாற்றினார். முனைவர் வி. கோபாலகிருஷ்ணன் வணிகவியல்துறைத் தலைவர், சுயநிதிப் பிரிவு பொறுப்பாளர்,அவர்கள் தலைமையுரை ஆற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.திலகவதி அவர்களும், பேராசிரியர் திரு. மு.முத்துக்குமார் அவர்களும் சிறப்பு விருந்தினரைக் கௌரவித்தனர். “நெய்தலோரம் நெய்தது” எனும் தலைப்பில் “கவிஞர் கர்ணன்” சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர் இலக்கியம் குறித்தும், படைப்புகள் குறித்தும் மாணவர்களோடு கலந்துரையாடினார். இளங்கலைத்தமிழ் இரண்டாமாண்டு மாணவன் கோ.இசக்கிமுத்து நன்றியுரை ஆற்றினார். தமிழ்த்துறைத்தலைவர், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு இந்நிகழ்வைச் சிறப்பித்தனர். நாட்டுப்பண்ணோடு விழா இனிதே நிறைவுற்றது.