
சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் – NSS Units: 54 & 56
தேசிய சட்டப்பணிகள் இன் ஆணைக்குழு மற்றும் மாநில சட்ட்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் அடிப்படையில் இன்று 17.10.2024 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காமராஜ் கல்லூரியில் வைத்து சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மேற்படி கருத்தரங்கில் முன்னதாக மூத்த வழக்கறிஞர் திரு.K.ரெங்கநாதன் , M.A. ,B. L., அவர்கள் சிறப்புரை வழங்கினார்கள். தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் /மூத்த உரிமையியல் நீதிபதி திருமதி.C. கலையரசி ரீனா, M.L., அவர்கள் முன்னிலை வகித்து தலைமையுரை ஆற்றினார். மேற்படி கருத்தரங்கில் கல்லூரி மாணாக்கர்கள் 100-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு மேற்படி கருத்தரங்கில் கலந்துகொண்டு சட்டம் சம்மந்தமான சந்தேகத்தை கேட்டு தெரிந்து கொண்டார்கள். சட்ட உதவி மைய நீதிபதி திருமதி.C. கலையரசி ரீனா அவர்கள் தனது தலைமை உரையில் மனிதம் தாண்டிய மனிதநேயம் அனைத்து மாணவ மாணவிகளுக்கு இருக்க வேண்டும் என்றும், பிளாஸ்டிக் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும், மாணவ மாணவிகளுக்கு மதுப்பழக்கம் இருக்கவே கூடாது என்றும், நம்மளோடு இறுதி வரை பயணிப்பது நமது உடல் மட்டுமே அதனால் தீய எண்ணங்கள் இல்லாமல் ஒழுக்கதோடு உடலை பாதுகாக்கவேண்டும் என்றும், போக்சோ சட்டம் குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், வரதட்சணை சட்டம் குறித்தும், பெண்கள் ஆடை வடிவமைப்பில் உண்டான பிரச்சனைகள் குறித்தும், இதன் மூலம் ஏற்படும் பிரச்சனையில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாக்கலாம் என்பது குறித்தும், தேசிய சட்ட உதவி எண். 15100 குறித்தும், அதன் செயல்பாடு குறித்தும், குழந்தைகள் பாலியல் பிரச்சனை குறித்தும், மாணவ மற்றும் மாணவிகள் தனது செல்ஃபோன் பயன்பாட்டில் உண்டான ஆபத்து குறித்தும், அதிலிருந்து எவ்வாறு தங்களை பாதுகாக்கலாம் என்பது குறித்தும், மாணக்கர்கள் இந்த வயதில் படிப்பு ஒன்று மட்டுமே மிக முக்கியம் என கருதி நன்றாக படித்து வாழ்க்கையில் எவ்வாறு முன்னேற வேண்டும் எனவும் விளக்கமாக மேற்படி கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு எடுத்துரைத்தார்.மேற்படி கருத்தரங்கில் கல்லூரி முதல்வர் முனைவர் .J. பூங்கொடி, கல்லூரி துணை முதல்வர் முனைவர். அசோக் அவர்கள் கலந்து கொண்டார்கள். மற்றும் இறுதியில் கல்லூரி பேராசிரியரும் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலருமான திரு.பா.ஆனந்த் (அணி எண் 54) அவர்கள் நன்றியுரை வழங்கிட, உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் முனைவர் J. நாகராஜன் அவர்கள் உடனிருந்தார்கள். விழா ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் ஓ.நேத்தாஜி (அணி எண் 55) மற்றும் திரு.மா.அய்யனுராஜ் (அணி எண் 56) ஆகியோர் செய்திருந்தனர்.