
கிராமப்புற இளைஞர்களுக்கான சுய தொழில் பயிற்சி: அலங்கார மீன் வளர்ப்பு – UBA
காமராஜ் கல்லூரி உன்னத் பாரத் அபியான் (AISHE Code: 41209) சார்பில் கிராமப்புற இளைஞர்களுக்கு சுய தொழில் பயிற்சியாக மாத வருமானம் ஈட்ட கூடிய அலங்கார மீன் வளர்ப்பு பயிற்சி முகாம் சேர்வைக்காரமடம் பஞ்சாயத்து , சக்கம்மாள்புரத்தில் நடைபெற்றது. பண்ணை மேலாண்மை குறித்தும், மீன் குஞ்சுகள் சந்தை படுத்துதல் குறித்தும் விளக்கவுரை அளிக்கப்பட்டது. சிதா அகுவா ஃபார்ம் நிறுவனர் திரு .சரவணன் அவர்கள் கள பயிற்சி அளித்தார்கள்.இந்த தொழில் முனைவோருக்கான பயிற்சி ஏற்பாடுகளை உன்னத பாரத் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெ. நாகராஜன் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முனைவர் A. சுபாஷினி ஆகியோர் செய்து இருந்தனர்.