Back
Home Events கிராமசபை கூட்டத்தில் காமராஜ் கல்லூரி பங்கேற்பு – UBA

கிராமசபை கூட்டத்தில் காமராஜ் கல்லூரி பங்கேற்பு – UBA

தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் ஊராட்சி மன்ற கிராம சபை கூட்டம் 23-11-2024 அன்று பொது மக்கள் பங்கேற்புடன் நடை பெற்றது.இதில் காமராஜ் கல்லூரி உன்னத பாரத் அபியான் அலகு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாணவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கடல் பாசி மதிப்பு கூட்ட பெற்ற பொருட்கள் உற்பத்தி, மண்புழு உர மேலாண்மை, மற்றும் வரும் கல்வியாண்டில் மேற்கொள்ள பட வேண்டிய சமூக பணிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்ற பட்டது. வரும் டிசம்பர் மாதத்துடன் பதவி காலம் நிறைவு பெறும் பஞ்சாயத்து தலைவர் திருமதி. V. முக்கனி அவர்களுக்கு கல்லூரி சார்பில் பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டது. கிராம சபை கூட்டம் ஏற்பாடுகளை பஞ்சாயத்து செயலர் திருமதி கோமதி அவர்கள் செய்து இருந்தார்கள். ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Date
Nov 23 2024
Expired!
Time
11:00 am - 6:00 pm

Leave A Reply