
காமராசர் கலை இலக்கியக் கழகம் – தமிழ்த்துறை
23.06.2023 அன்று காமராஜ் கல்லூரி, தமிழ்த்துறை, (சுயநிதிப்பிரிவு) – காமராசர் கலை இலக்கியக் கழகம் சார்பாக கலை இலக்கியப் போட்டிகள் நடைபெற்றன. துணை முதல்வர் முனைவர் அ .அருணாசல ராஜன் ஐயா அவர்களின் பரிந்துரைப்படி இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணாக்கர்கள் கலந்து கொண்டனர். பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி போன்ற இலக்கியப் போட்டிகள் நடைபெற்றன. தமிழ் இலக்கியம் குறித்த வினாடி வினா போட்டியும் நடைபெற்றது. மாணாக்கர்களின் திறனை வெளிக்கொணரும் வகையில் புதுவிதமான போட்டிகள் நடைபெற்றன. மாணாக்கர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.திலகவதி அவர்கள் தலைமையேற்று போட்டிகளை நடத்தினார். தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் சு.ராஜலட்சுமி, முனைவர் ஜெ.ராஜ செல்வி, முனைவர் க. சுப்புலட்சுமி, திருமதி அ.எமிமா ஆகியோரும் இணைந்து போட்டிகளைச் சிறப்பாக நடத்தினர். ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடம் பெறும் மாணாக்கர்கள் சிறப்பிக்கப்பட்டனர். விழா இனிதே நிறைவுற்றது.