Home Events - Kamaraj College களப்பணி: மாவட்ட மைய நூலகம் – Tamil Dept.

களப்பணி: மாவட்ட மைய நூலகம் – Tamil Dept.

27.02.2025 அன்று காமராஜ் கல்லூரி தமிழ்த்துறை சார்பாக 50 மாணாக்கர்கள் மாவட்ட மைய நூலகத்திற்கு களப்பணிக்காக (field work) சென்றார்கள். மாவட்ட மைய நூலகத்தின் நூலகர் திருமதி. ஜெ. லதா அவர்களும் நூலகர் உ.விஜயலட்சுமி அவர்களும் கருவூலகத்துறை (பணி நிறைவு) திரு.செய்யது முகமது ஷெரீப் அவர்களும் மைய நூலகத்தின் பெருமைகளையும் பல மாணவர்கள் பயன்பெற்றுக் கொண்டிருப்பதையும், பல எழுத்தாளர்களின் உணர்வுகளின் வெளிப்பாடுகளாய் விளங்கும் நூலகச் சிறப்புகளை மாணவர்களிடம் உரையாற்றினார்கள். நூலகப் பயன்பாடுகளை அறிந்து கொண்ட மாணவர்கள் உறுப்பினராகச் சேர்ந்தனர். இக்களப்பணியின் மூலம் மாணவர்கள் நூலகச் சிறப்பினை அறிந்து கொண்டு பயனடைந்தார்கள். தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் முனைவர் மு. செல்வி, முனைவர் சு. இராஜலெட்சுமி, மாணாக்கர்களை அழைத்துச் சென்றனர். இந்நிகழ்வு மாணாக்கர்களுக்கு பயனுள்ளதாய் அமைந்தது.

Leave A Reply