
கல்வி கடன் பற்றி விழிப்புணர்வு முகாம்
மாவட்ட நிர்வாகம் சார்பாக இன்று காமராஜ் கல்லூரியில் மாணவ-மாணவிகளுக்கு கல்வி கடன் பற்றி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. காலை 11.30 முதல் மாலை 3.15 வரைக்கும் கல்விக்கடன் பற்றி ஒவ்வொரு துறைவரியாக அணைத்து மாணவ-மாணவிகளுக்கும் எடுத்துறைக்கப்பட்டது. குறிப்பாக கல்விகடன் பற்றிய முக்கியத்துவம், கல்வி கடன் வாங்க தகுதியானவர்கள், கல்வி கடன் விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் வித்யலக்ஷ்மி (portal) பற்றி வழிமுறைகள் ஆகியவற்றை மாணவ-மாணவிகளுக்கு தெளிவாக விளக்கப்பட்டது. இதில் 2500 மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துந்துகொண்டனர். இந்த மாபெரும் கல்வி கடன் விழிப்புணர்வு நடத்த காமராஜ் கல்லூரி முதல்வர் முனைவர் ஜே. பூங்கோடி அவர்கள் வழிகாட்டுத்தலின் படி கல்விகடன் ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ. கோவிந்தராசு மற்றும் மாணவர்கள் பிரநிதி முத்துக்குமார் மற்றும் அருண்குமார் ஆகியோர் கல்வி கடன் பற்றி விழிப்புணர்வு மாணவர்களுக்கு சிறப்பாக விளக்கப்பட்டது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.