
கல்விச் சுற்றுலா – தமிழ்த்துறை
24.2.23 அன்று காமராஜ் கல்லூரியின் தமிழ்த்துறை சுயநிதிப் பிரிவின் சார்பாக ஆதிச்சநல்லூர், கொற்கை ,சிவகளை தொல்லியல் பகுதியைக் காண இளங்கலைத்தமிழ் மூன்றாமாண்டு மாணவ, மாணவியர்கள் சென்றனர். அவர்களோடு தமிழ்த்துறைத் தலைவர் முனைவர்க. திலகவதி முனைவர் ச.ராஜலட்சுமி முனைவர்ஜெ. ராஜ செல்வி முனைவர்க. சுப்புலட்சுமி முனைவர் ந.சரண்யா பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். சிவகளை மாணிக்கம் ஐயா, முத்தாலங்குறிச்சி காமராசர் ஐயா அவர்களின் வழிகாட்டுதலில் அகழ்வாராய்ச்சி குறித்த தெளிவான விளக்கம் கிடைத்தது.news 7 தமிழ் channel – ல் இது குறித்து ஒளிபரப்பப்பட்டது. மாணாக்கர்களுக்கு கல்விச் சுற்றுலா மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.