Home Events - Kamaraj College கண்தானம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு – தமிழ்த்துறை

கண்தானம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு – தமிழ்த்துறை

26.03.2024 அன்று நம் காமராஜ் கல்லூரி (சுயநிதிப்பிரிவு) தமிழ்த்துறையும், காமராசர் கலை இலக்கியக்கழகமும் இணைந்து “கண்தானம் மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு” நிகழ்வை நடத்தியது. இவ்விழிப்புணர்வு அரங்கில் முதலாமாண்டு , இரண்டாமாண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவிகள் மகிழ்வோடு கலந்து கொண்டனர். தமிழ்த்தாய் வாழ்த்தோடு நிகழ்வு இனிதே தொடங்கியது. முதலாம் ஆண்டு மாணவன் சோலைராஜா வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினர் திரு. S. வேலு அவர்கள் கண்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள், கண் தானம் செய்தல், ஆரோக்கியமான உணவுமுறைகள் பற்றி மாணவர்களோடு கலந்துரையாடினார். சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு நம் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் அ.அருணாசல ராஜன் அவர்கள் பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தார். தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாணவர்கள் ஒருங்கிணைப்புக் குழுவினர் ம.பாரதிகண்ணன், கு. அஸ்வதி ராதா, ஜா. ரியானி ஆகியோர் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதனைத் தொடர்ந்து மூன்றாம் ஆண்டு மாணவி முத்து அருணா நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வினை முழுவதுமாக முதலாம் ஆண்டு மாணவி ரியானி தொகுத்து வழங்கினார். இறுதியாக நாட்டுப்பண்ணுடன் இந்நிகழ்வு இனிதாக நிறைவடைந்தது

Leave A Reply