
ஒரு நாள் கருத்தரங்கம் – Tamil Dept.
10.10.2023 அன்று காமராஜ் கல்லூரி தமிழ்த்துறையும் (சுயநிதிப்பிரிவு), காமராஜ் இலக்கியக் கழகமும் இணைந்து ‘ஒரு நாள் கருத்தரங்கம்’ நடத்தினர். இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவன் சோ.சோலைராஜா தொகுப்புரை ஆற்றினார். தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழா இனிதே தொடங்கியது. இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவன் ர. விக்னேஷ் வரவேற்புரை ஆற்றினார்.துணை முதல்வர் முனைவர் அ. அருணாசல ராஜன் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.திலகவதி அவர்கள் வாழ்த்துரை ஆற்றினார். “சிலம்பில் குறளின் குரல்” என்னும் தலைப்பில் நம் காமராஜ் கல்லூரியின் (Aided) தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் மா. சிவபாக்கியம் அவர்கள் சிறப்புரையாற்றினார். மாணவர்களுக்குச் சிலப்பதிகாரத்தில் ஒலிக்கும் திருக்குறளின் சாயலாக விளங்கும் அறக்கருத்துக்கள் குறித்து ஆய்வு நோக்கில் உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினரின் உரையைத் தொடர்ந்து இளங்கலை இரண்டாமாண்டு மாணவி கு.அஸ்வதி ராதா சிலம்பு குறிப்பிட்ட திருக்குறளின் சாயல் குறித்து தனக்குப் புலப்பட்ட கருத்துக்களை ஆய்வு நோக்கில் பேசினார். மாணவர்களும் தங்களுக்கு ஏற்பட்ட ஐயங்களைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டனர். முதலாம் ஆண்டு மாணவன் செ. சஞ்சய் நன்றியுரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு இந்நிகழ்வைச் சிறப்பித்தனர். நாட்டுப் பண்ணோடு விழா இனிதே நிறைவடைந்தது.