
எனது மண் எனது தேசம் நிகழ்ச்சி – NSS Units: 54 & 56
மத்திய அரசின் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை, நாட்டு நலப்பணித்திட்டம், அஞ்சல்துறை மற்றும் நேரு யுவா கேந்திரா அமைப்பு இணைந்து காமராஜ் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் திரு.மா.அய்யனுராஜ் (உதவிப்பேராசிரியர்) வரவேற்புரை வழங்கினார்.கல்லுரி பொறுப்பு முதல்வர் முனைவர்-ஜோசப்ராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். தூத்துக்குடி மாவட்ட நேரு யுவா கேந்திரா ஒருங்கிணைப்பாளர் ஆர்.இசக்கி, நிகழ்ச்சி உதவியாளர் திருமதி.புவனேஷ்வரி, திரு.ஆறுமுகம் மாவட்ட பயிற்றுநர், திரு.பொன்னையா கண்காணிப்பாளர், இந்திய அஞ்சல்துறை, ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்கள். தொடர்ந்து மாணவர்கள் பல்வேறு மற்றும் அஞ்சல்துறை ஊழியர்கள் பகுதியிலிருந்து கொண்டு வந்த மண் நேரு கேந்திரா அமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின் எனது மண் எனது தேசம் உறுதிமொழி எடுக்கப்பட்டது. பின் மாணவ மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பேரணியும் நடைபெற்றன. நிகழ்ச்சியை திரு.சுப்பையா இந்திய அஞ்சல்துறை, தொகுத்து வழங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் உதவிப்பேராசிரியர் திரு.பா.ஆனந்த் நன்றியுரை கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, தூத்துக்குடி மாவட்ட நேரு யுவா கேந்திரா ஒருங்கிணைப்பாளர், துறைத் தலைவர்கள், உடற்கல்வி இயக்குநர், பேராசிரியர்கள். அலுவலர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர்.