Home Events - Kamaraj College உலக உணவு தினம் – NSS Units 54, 55 & 56

உலக உணவு தினம் – NSS Units 54, 55 & 56

அக்டோபர் 16-2024 ல் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு நிறுவப்பட்டதன் நினைவாக ஆண்டுதோறும் உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது.
அதன் ஒருபகுதியாக தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.பூங்கொடி அவர்களின் ஆலோசனைப்படி,அதன் பயன்பாட்டை மாணவர்களுக்கு நினைவு கூறும் விதமாக காமராஜ் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அணிஎண் 54,55&56 சார்பாக மாணவர்களுக்கு உணவு வழங்கல் மற்றும் விநியோகத்தில் உள்ள பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வு கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உன்னத் பாரத் அபியான் ஒருங்கிணைப்பாளர் முனைவர் J.நாகராஜன் மற்றும் அதன் மாணவ உறுப்பினர்கள் உணவுத் தாவரங்களை வளர்ப்பதற்கும், உணவு விநியோகத்திற்கும் உதவும் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்கள்.இதில் நாட்டுநலப்பணித்திட்டத்தில் 80 மாணவர்கள் பங்குபெற்றனர்.
இந்நிகழ்வை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் முனைவர் O.நேத்தாஜி (அணி எண் 55), பா.ஆனந்த் (அணி எண் 54), மா.அய்யனுராஜ் (அணி எண் 56) ஆகியோர் செய்திருந்தனர்.

Leave A Reply