
உபசரிப்பு விழா – தமிழ்த்துறை
15.09.2023 அன்று காமராஜ் கல்லூரி தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு), மூன்றாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ, மாணவிகள் இணைந்து முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு உபசரிப்பு விழாவை நடத்தினர். இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவன் அ.ராஜகப்பல் தொகுப்புரை ஆற்றினார். தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழா இனிதே தொடங்கியது. மா.முத்து அருணா இளங்கலைத் தமிழ் மூன்றாம் ஆண்டு மாணவி வரவேற்புரை ஆற்றினார்.துணை முதல்வர் முனைவர் அ. அருணாசலராஜன் அவர்கள் தலைமை உரை ஆற்றினார். தமிழ்த்துறை மூத்த பேராசிரியர் முனைவர் S. ராஜலெட்சுமி அவர்கள் வாழ்த்துரை ஆற்றினார். மூன்றாம் ஆண்டு மாணவன் ம.பாரதி கண்ணன் நன்றியுரை கூறினார். தமிழ்த்துறைத் தலைவர், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு இந்நிகழ்வைச் சிறப்பித்தனர். நாட்டுப்பண்ணோடு விழா இனிதே நிறைவடைந்தது.