
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் – NSS Units: 54 & 56
நான் முதல்வன் திட்டம் நடத்தும் தூத்துக்குடி மாவட்ட கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்களுக்கான ஒருநாள் பணிமனை இன்று 16-02-2024 (வெள்ளி) நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.பூங்கொடி தலைமை வகித்து மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டல் குறித்து கருத்துரைத்தார்கள். தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் கருப்பசாமி அவர்கள் மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் குறித்து கலந்துரையாடினார். இந்நிகழ்வில் 30 தூத்துக்குடி மாவட்ட நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள் கலந்துகொண்டார்கள். நம்கல்லூரி சார்பாக திட்ட அலுவலர்கள் திரு.ஆனந்த (உதவிப்பேராசிரியர், அணி எண்-54), திரு.மா.அய்யனுராஜ் (உதவிப்பேராசிரியர், அணி எண்-56) கலந்து கொண்டனர்.