
அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம்
23/03/2024 இன்று தமிழ்நாடு அரசு சார்பில் நான் முதல்வன் என்ற அமைப்பின் மூலமாக நம் காமராஜ் கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 21 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் சுமார் 1245 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் 840 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். அதில் 221 மாணவர்கள் பணி நியமன ஆணை பெற்றுள்ளனர். மீதம் உள்ள மாணவர்களுக்கு வரும் நாட்களில் பணி நியமன ஆணை, கலந்து கொண்ட தனியார் நிறுவனம் மூலம் வழங்கப்படும்.