கிராமசபைக் கூட்டம் 2025 – UBA
சென்னை மறைமலைநகரில் உள்ள மாநில ஊராட்சி அலுவலகம் வழிகாட்டலின்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊராட்சியும், காமராஜ் கல்லூரியும் இணைந்து ஐந்து கிராமங்களுக்கு நலத்திட்டங்கள் செயல்படுத்திட புரிந்துணர்வு ஒப்ந்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன் செயல்பாட்டின் நிகழ்வாவாக 15-08-2025(வெள்ளி) இன்று, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கோரம்பள்ளம் ஊராட்சியில் சுதந்திரதினத்தை முன்னிட்டு கிராமசபைக்கூட்டம் கிராம நிர்வாக அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதியிலிருந்து மேற்கொண்ட செலவின அறிக்கை வாசிக்கப்பட்டது.
அவ்வறிக்கையில், தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.இதில் கோரம்பள்ளம் ஊராட்சிக்கு உள்பட்ட கிராம மக்கள் 300 பேர் கலந்துகொண்டனர். காமராஜ் கல்லூரி சார்பாக நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் மா. அய்யனுராஜ் அவர்கள் கலந்துகொண்டு கிராமங்களுக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகள், நலத்திட்டப் பணிகள் குறித்த தகவல்களை எடுத்துரைத்தார்கள். இக்கூட்டத்தில் ஊராட்சிமன்ற எழுத்தாளர் சீனீராஜ் தலைமைவகித்து அறிக்கை வாசித்திட கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
