Thoothukudi District Central Library – NSS Units 54,55,56 & UBA
தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில், காமராஜ் கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.பூங்கொடி அவர்களின் வழிகாட்டுதலின்படி, நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களால் துறைவாரியான புத்தகங்களை அந்தந்த பகுதிகளில் அடுக்கி வைத்தல் மற்றும் புது வரவு நூல்களை தொகுத்தல் போன்ற பணிகளை செய்திருந்தனர். இதற்காக தூத்துக்குடி முதல்நிலை நூலகர் மா.ராம்சங்கர் அவர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை மாணவர்களுக்கு வழகினார்கள். இதனை காமராஜ் கல்லூரி UBA மற்றும் நாட்டுநலப்பணித்திட்ட அணி எண்கள் 54,55,56 ல் உள்ள தன்னார்வ மாணவர்களைக் கொண்டு நூலகப் பணியை சிறப்பாகச் செய்தனர். மைய நூலகத்திற்கு அணி எண் 54 அலுவலர்- பா.ஆனந்த்,அணி எண் 55 அலுவலர்- ஒ.நேத்தாஜி, மற்றும் அணி எண் 56 அலுவலர்- மா. அய்யனுராஜ் ஆகியோர் மாணவர்களுடன் சென்றிருந்தனர்.
