Home Events Blood Donation Camp – NSS Units: 54, 55 & 56

Blood Donation Camp – NSS Units: 54, 55 & 56

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்டம் ,அரசு மருத்துவக் கல்லூரி சார்பாக இரத்த தான முகாம் 23-07-2024 (செவ்வாய்க் கிழமை) நடைபெற்றது. இம்முகாமில் 100 க்கும் மேற்ப்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொள்ள முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி செயலாளர் P.S.P.K.J சோமு அவர்களும்,கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.பூங்கொடி அவர்களும்,துணை முதல்வர் முனைவர் அசோக் அவர்களும் கலந்துகொண்டு விழாவைத் தொடங்கி வைத்தனர். தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி இரத்த வங்கி மருத்துவ அதிகாரி- மருத்துவர் R.சாந்தி அவர்களும், மருத்துவ பணியாளர்களும் கலந்துகொண்டு முகாமினை இனிதே நடத்தினர். இந்நிகழ்வின் ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவர்கள் திரு.பா.ஆனந்த் (அணி எண் 54), முனைவர் ஒ.நேதாஜி (அணி எண் 55), திரு.மா. அய்யனுராஜ் (அணி எண் 56) ஆகியோர் செய்திருந்தனர். இரத்த தானம் செய்த மாணவ மாணவிகளை கல்லூரி முதல்வர் அவர்கள் பாராட்டினார்கள். இந்நிகழ்வை வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர். மாரிமுத்து மற்றும் அலுவலக தலைமைக் கண்காணிப்பாளர் P.சரவணன் அவர்களும்,UBA ஒருங்கிணைப்பாளரும் உடனிருந்து விழாவை சிறப்புற வழிநடத்தினர்.

Date

Jul 23 2024
Expired!

Time

10:00 am

Location

Kamarajar Kalvi Arangam (Main Auditorium)

Leave A Reply