Home Events தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் – Tamil Dept.

தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் – Tamil Dept.

28.8.2023 அன்று காமராஜ் கல்லூரி தமிழ் துறையும் (சுயநிதி பிரிவு) காமராஜர் கலை இலக்கிய கழகமும் இணைந்து விருந்தினர் விரிவுரை நிகழ்வை நடத்தியது. தமிழ்த்தாய் வாழ்த்தோடு விழா இனிதே தொடங்கியது. இளங்கலைத் தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவி சு அனுசியா வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் அறிமுக உரை ஆற்ற துணை முதல்வர் முனைவர் அ. அருணாச்சல ராஜன் அவர்கள் சிறப்பு விருந்தினரைக் கௌரவப்படுத்தினார்.சிறப்பு விருந்தினர் “தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அறிவியலைத் தமிழோடு இணைத்துப் பார்க்கும் முறையைக் கூறி அவர்களின் வினாக்களுக்குப் பதிலும் அளித்தார்கள். இளங்கலைத் தமிழ் முதலாம் ஆண்டு மாணவர்கள் ப. லட்சுமணன், மா. சீதாராமன் ஆகியோர் நிகழ்வினைத் தொகுத்து வழங்கினார்கள். தமிழ் முதலாம் ஆண்டு மாணவி ஹரிணி நன்றியுரை கூறினார். இதற்கு முன்பு நடத்தப்பட்ட பயிற்சிப் பட்டறை நிகழ்வில் சிறப்பாக தமது படைப்புக்களை வெளிப்படுத்திய முதலாமாண்டு மாணவன் சோலைராஜா அவர்களுக்கும் இரண்டாமாண்டு மாணவி அஸ்வதிராதா அவர்களுக்கும் மூன்றாமாண்டு மாணவன் பாரதிகண்ணன் அவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு இந்நிகழ்வினைச் சிறப்பித்தனர். விழா இனிதே நிறைவடைந்தது.

Date

Aug 28 2023
Expired!

Time

11:00 am

Location

Kamarajar Kalvi Arangam (Main Auditorium)

Leave A Reply