நமது கல்லூரியில் சேர்க்கை பெற விரும்பும் மாணவர்களுக்கு,
ஒவ்வொரு ஆண்டும் இளங்கலை இறுதி செமஸ்டர் தேர்வுகள் முடிவடைந்தவுடன், காமராஜ் கல்லூரியில் முதுகலைப் பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும்.
சேர்க்கைக்கு முதற் படியாக , மாணவர்கள் கல்லூரி இணையதளத்தில் முன் பதிவு செய்ய வேண்டும். 5வது செமஸ்டர் வரை உள்ள மதிப்பெண்களை வைத்து முன்பதிவு செய்யலாம். முன் பதிவு படிவம் கல்லூரி இணையதளத்தில் ஜூன் 1 ஆம் தேதி முதல் கிடைக்கும்.
இறுதியாண்டு தேர்வு முடிவடைந்த உடன், மாணவர்கள் கல்லூரியில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். 5வது செமஸ்டர் வரை பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்களுக்கு தற்காலிக சேர்க்கை (Provisional Admission) வழங்கப்படும்.
இறுதி தேர்வு முடிவுகள் வெளியானவுடன், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கல்லூரிக்கு நேரில் வருகை புரிந்து தங்களின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இந்த பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மட்டுமே சேர்க்கைக்காக கருதப்படும்.
அடுத்த கட்டமாக மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அசல் சான்றிதழ்களை கல்லூரிக்கு நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும். சரிபார்க்கப்பட்ட பிறகு, சேர்க்கையை உறுதி செய்ய மாணவர்கள் விதிமுறைகளின்படி கட்டணம் செலுத்த வேண்டும். சேர்க்கையின் பொழுது, அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்