Overall Championship Trophy - BBA Shipping and Logistics Management Dept.

திண்டுக்கல் பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வணிக செயலாட்சியியல் துறை சார்பாக REFLEX 2K22 என்ற பெயரில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான கலை மற்றும் பண்பாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் நமது காமராஜ் கல்லூரி சுயநிதி பாடப்பிரிவின் வணிக செயலாட்சியியல் (ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மென்ட் - BBA Shipping and Logistics Management) துறை மாணவர்கள் கலந்து கொண்டு ஒட்டுமொத்த போட்டிகளுக்கான முதல் வெற்றி கேடயத்தையும் ஒட்டுமொத்த போட்டிகளுக்கான பரிசு தொகையாக ரூபாய் 12000/- யும் பெற்றனர்.
Bestseller மற்றும் As You Like It என்ற போட்டிகளில் முதல் பரிசும், Art and Craft மற்றும் Fastest Figure என்ற போட்டிகளில் இரண்டாம் பரிசும் பெற்றனர். மதுரை திருச்சி போன்ற நகரங்களிலிருந்து சுமார் பதினைந்திற்கு மேற்பட்ட கல்லூரிகள் கலந்து கொண்டதில் நமது கல்லூரி மாணவர்கள் வெற்றி பெற்று நமக்கும் நமது கல்லூரிக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
இடம்: பார்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திண்டுக்கல் - 27.04.2022.