வெற்றியின் வாசல் கல்வி

Dec
23
Dec/23 02:00
Seminar Hall - Golden Jubilee Block
When: 
Thursday, December 23, 2021 - 02:00
Where: 

Seminar Hall - Golden Jubilee Block

காமராஜ் கல்லூரி, தமிழ்த்துறை (சுயநிதி) சார்பாக 23.12.2021 அன்று முன்னாள் மாணவர் சந்திப்பு மற்றும் ஊக்க உரை நிகழ்வு நடைபெற்றது. விழாவில் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சி. சிவகுமார் அவர்கள் நேரமேலாண்மையின் அவசியம் குறித்து தலைமையுரையாற்றினார்.சிறப்பு விருந்தினராக முன்னாள் மாணவனும் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கமும், தர வரிசையில் முதலிடமும் பெற்ற க. சண்முக சுந்தரம் அவர்கள் 'வெற்றியின் வாசல் கல்வி' எனும் தலைப்பில் ஊக்க உரை நிகழ்த்தினார். விழாவில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மற்றும் இளங்கலை மாணவ மாணவியர் அனைவரும் கலந்துகொண்டனர்.விழாவினை இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவி சே.மகா லெட்சுமி தொகுத்து வழங்க, வரவேற்புரையை இரண்டாம் ஆண்டு மாணவி மா.முத்துகுட்டி அவர்களும், நன்றியுரையினை மூன்றாம் ஆண்டு மாணவி அ. பிரியா அவர்களும் வழங்கினர்.