Home Events - Kamaraj College விவேகானந்தரின் சிந்தனைகள் – இளஞ் செஞ்சிலுவைச் சங்கம்

விவேகானந்தரின் சிந்தனைகள் – இளஞ் செஞ்சிலுவைச் சங்கம்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 25.09.2023 அன்று காலை 10 .30 மணிக்கு இளஞ் செஞ்சிலுவைச் சங்கம் நடத்திய கருத்தரங்கில் காமராஜ் கல்லூரி சுயநிதிப்பிரிவில் பயிலும் முதலாமாண்டு மாணவ / மாணவியர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் சேவாலயா அறக்கட்டளையின் நிறுவனர் ஆர்.இராஜேந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விவேகானந்தரின் சிந்தனைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். வேதியியல் துறைத் தலைவர் முனைவர் என்.சந்திரலேகா அவர்கள் சிறப்பு விருந்தினரைக் கெளரவித்தார். தமிழ்த்துறைப் பேராசிரியர் திருமதி.ம.மாதரசி அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்வினை இளஞ்செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், வேதியல் துறைப் பேராசிியருமான முனைவர். பி. சக்திவேல் அவர்கள் ஒருங்கிணைப்புச் செய்திருந்தார். இந்நிகழ்வில் காமராஜ் கல்லூரியின் முதலவர் மற்றும் துணைமுதல்வர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள் .

Leave A Reply