Home Events - Kamaraj College விருந்தினர் விரிவுரை: தமிழில் சமய இலக்கியங்கள் – Tamil Dept.

விருந்தினர் விரிவுரை: தமிழில் சமய இலக்கியங்கள் – Tamil Dept.

06.02.2025 அன்று காமராஜ் கல்லூரி (தன்னாட்சி) தமிழ்த்துறை, காமராசர் கலை இலக்கியக் கழகம், தூத்துக்குடி சச்சிதானந்த சபை இணைந்து நடத்திய Academy Institution Collaboration: Guest lecture on ‘தமிழில் சமய இலக்கியங்கள்’ என்ற தலைப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) சிறப்பு விருந்தினர் விரிவுரை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ‘ஞான நிகேதனம்’ என்ற பள்ளியை நடத்தி அதில் கல்வெட்டியல், கம்பராமாயணம், பகவத் கீதை, சமஸ்கிருதம் முதலிய வகுப்புகள் நடத்தியும் Love Descends, Words of Wisdom , பாரத கதாம்ருதம், வாழ்க்கைக் கல்வி முதலிய பல புத்தகங்களை எழுதியும், ஆன்மீகச் சொற்பொழிவு நடத்தியும் தொண்டு செய்து வருகின்ற ஆன்மீகச் சொற்பொழிவாளர் திருமதி பிரியா சந்தான கிருஷ்ணன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். தமிழ்த் துறைத் தலைவர் க.திலகவதி அவர்கள் தலைமையுரை வழங்கினார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்(MoU) ஒருங்கிணைப்பாளர், நுண்ணுயிரியல் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் சங்கீதா அவர்கள் அறிமுக உரை ஆற்றினார்கள். இந் நிகழ்ச்சியைத் தமிழ்த்துறையின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்(MoU) பொறுப்பாளர் முனைவர் மு.செல்வி அவர்கள் ஏற்பாடு செய்தார்கள். தமிழ்த்துறை மாணவர் சோ.சோலைராஜா தொகுப்புரை வழங்கினார். முதுகலை மாணாக்கர்கள் ச.சண்முகசுந்தரம் வரவேற்புரையும், கா. நிவேதா அவர்கள் நன்றியுரையும் வழங்கினார்கள். இந்நிகழ்ச்சியை முதுகலை மாணாக்கர்கள் ச. சண்முகசுந்தரம், ரா.ராமலெட்சுமி, கா. நிவேதா அஆகியோர் ஒருங்கிணைதந்து நடத்தினர். . இந்நிகழ்வில் 110 மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் முனைவர் சு.இராஜலட்சுமி, முனைவர் க.சுப்புலட்சுமி, திரு கண்ணன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். நாட்டுப்பண்ணுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

Date

Feb 06 2025
Expired!

Time

2:45 pm - 4:00 pm

Location

Seminar Hall - Golden Jubilee Block

Leave A Reply