Back
Home Events முன்னாள் மாணவரின் சிறப்புரை – தமிழ்த்துறை

முன்னாள் மாணவரின் சிறப்புரை – தமிழ்த்துறை

10.07.2024 அன்று காமராஜ் கல்லூரி தமிழ்த்துறையும் (சுயநிதிப்பிரிவு) காமராசர் கலைஇலக்கியக் கழகமும் இணைந்து முன்னாள் மாணவரின் சிறப்புரை நிகழ்வினை நடத்தினர். இதில் முன்னாள் மாணவரான அ.கணேஷ் (ஹோண்டா நிர்வாக அலுவலர், தந்திபார்வை மாவட்ட ஒளிப்பதிவாளர்) கலந்து கொண்டு மாணாக்கர்களுக்கு சிறப்புரையாக ஊக்கவுரை ஆற்றினார். தமிழ்த்துறை மாணாக்கர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். துணைமுதல்வர் அ.அருணாசல ராஜன் ஐயா அவர்களின் பரிந்துரைப்படி இந்நிகழ்வு நடந்தது. துறைத்தலைவர் முனைவர் க.திலகவதி, உதவிப் பேராசிரியர்கள் முனைவர் மு. செல்வி முனைவர் சு.ராஜலெட்சுமி, முனைவர் க. சுப்புலட்சுமி ஆகியோர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தமிழ்த் துறையில் பயில்வதன் நோக்கம், ஏற்படும் வேலை வாய்ப்புகள் குறித்தும் முன்னாள் மாணவர் தன் உரையை நிகழ்த்தினார். கல்லூரியின் தற்போதைய வளர்ச்சி கண்டு பெருமிதம் கொண்டார். மாணாக்கர்கள் ஒழுங்குடன் கல்லூரி பயணத்தை நிறைவு செய்ய ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்களாக ஜெ.ரியானி (இளங்கலைத்தமிழ் இரண்டாமாண்டு) ச.மாடசாமி (இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு) பா.ஆனந்த குமார் (இளங்கலைத் தமிழ் முதலாமாண்டு) ஆகியோர் இருந்தனர். நன்றியுரையோடு நிகழ்வு இனிதே முடிந்தது.

Date
Jul 10 2024
Expired!
Time
10:00 am
Location
Bharathiyar Block

Leave A Reply