
போதைப்பொருள் நுண்ணறிவு பணியகம் – NSS Units: 54 & 56
“போதைப்பொருள் நுண்ணறிவு பணியகம்” போதைப்பொருள் ஒழிப்புச்சங்கம் சார்பாக காமராஜ் கல்லூரியில் “போதைப்பொருள் இல்லாத கலாச்சாரத்தை வளாகத்தில் உருவாக்குதல்” என்னும் தலைப்பில் நடைபெற்றது. இதில் காவல்துறை கண்காணிப்பாளர் D.சந்திரகுமார், மற்றும் உதவி ஆய்வாளர் திரு.வீர தேவ ஜெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். போதைப்பொருள் ஒழிப்பு சங்க ஒருங்கிணைப்பாளரும் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலரும், தமிழ்த்துறை உதவிப்பேராசிரியருமான திரு.மா.அய்யனுராஜ் (அணி எண்-56) அனைவரையும் வரவேற்றுப் பேசினார். காவல் காண்காணிப்பாளர் அவர்களுக்கு துணைமுதல்வர் முனைவர் A.அசோக் அவர்கள் பொன்னாடை போர்த்தி சிறப்புசெய்து, போதைப்பொருளின் விளைவுகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். அதனைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினர் காவல் கண்காணிப்பாளர் D.சந்திரகுமார் அவர்கள் போதையில்லாத வாழ்வின் சிறப்பு குறித்தும், வாழ்வை வளப்படுத்தும் நற்கருத்துகளையும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். இந்நிகழ்வில் 200 மாணவர்கள் கலந்துகொண்டு போதைப்பொருளின் தீங்குகுறித்தும், அதனால் தனிமனிதனின் வாழ்வாதார பாதிப்பு குறித்தும் கேட்டறிந்தனர். இறுதியாக பகடிவதை ஒருங்கிணைப்பாளரும், நாட்டுநலப்பணித்திட்ட அலுவலருமான ஆங்கிலப்பேராசிரியர் திரு.பா.ஆனந்த் (அணி எண்-54) அவர்கள் அனைவருக்கும் நன்றியுரை கூற விழா நிறைவடைந்தது.