பொருநை இலக்கியத் திருவிழா 2024 – Cultural Committee
பொருநை இலக்கியத் திருவிழா மற்றும் இளைஞர் இலக்கியத் திருவிழா தொடக்க விழாவை முன்னிட்டு பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் 30-01-2024 (செவ்வாய் கிழமை) இன்று நடைபெற்றது.விழாவின் தொடக்கநாளான இன்று “மூத்த படைப்பாளர்களுடன் இளம் படைப்பாளிகளின் கலந்துரையாடல்” நடைபெற்றது.இதில் நாவலாசிரியர்களான வண்ணநிலவன்,ஸ்ரீதரகணேசன்,கோணங்கி போன்ற இலக்கிய எழுத்தாளர்கள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்ககள்.அதன்பின் நடைபெற்ற கலைநிகழ்வில் நம் காமராஜ் கல்லூரி கலைநிகழ்வு மாணவர்கள் கலந்துகொண்டு தம் கலைத்திறனை விழாமேடையில் நிகழ்த்தி பரிசு பெற்றனர்.பரிசு பெற்ற மாணவர்களுக்கு புத்தக பரிசுக் கூப்பனாக தொகை 5,000 -மும்,பரிசும்,பாராட்டுச்சான்றிதழும் வழங்கினார்கள்.இதில் கலைநிகழ்வு பொறுப்பாளர்களான ஆங்கிலப் பேராசிரியர் திருமதி-ரெமோனா, தமிழ்துறை பேராசிரியர் முனைவர் ராஜலட்சுமி(சுயநிதிப்பிரிவு)அவர்களும்,தூத்துக்குடி மாவட்ட புத்தக கண்காட்சி பொறுப்பாளர் தமிழ்த்துறை பேராசிரியர் திரு.மா.அய்யனுராஜ் அவர்களும், சுயநிதிப்பிரிவு தமிழ்த்துறை தலைவர் முனைவர் -திலகவதி,முனைவர் ராஜலட்சுமி,வாசகர் வட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் வசந்தி போன்றோர் உடனிருந்தனர்.
