பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் – Physical Education Dept.
கோவில்பட்டியில் (28/01/24) இன்று பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த பெண்களுக்கான மினிமாரத்தான் போட்டி நடைபெற்றது… இதற்கு நமது காமராஜ் கல்லூரியின் விளையாட்டுத்துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் நடுவர்களாக பணியாற்றினார். வெற்றிகரமாக நடத்திய நமது நடுவர் அணிக்கு சமூக நலன் மற்றும் மகளிர் நலன் அமைச்சர் திருமதி. கீதாஜீவன், மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் திரு.கருணாநிதி ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.
