Back
Home Events சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு பேரணி – Physical Education, Economics, Commerce Dept. & NSS units: 217, 241 & 244

சைபர் கிரைம் குறித்து விழிப்புணர்வு பேரணி – Physical Education, Economics, Commerce Dept. & NSS units: 217, 241 & 244

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மற்றும் காமராஜர் கல்லூரியின் விளையாட்டு துறை, வணிகவியல் துறை SF, பொருளாதார துறை SF மற்றும் NSS UNIT (217, 241, 244) சார்பாக மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று (17.02.2024) விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். எல். பாலாஜி சரவணன் மற்றும் காமராஜ் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர். அ.அருணாச்சலராஜன் அவர்களும் இணைந்து கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் இருந்து தொடங்கி குரூஸ் பர்னாந்து சிலை வரை சென்று நிறைவடைந்தது. இப்பேரணியின் போது கிரெடிட் கார்டு மோசடி, ஆன்லைனில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி, சமூக வலைதளங்களில் பண மோசடி, ஆகியோர் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் பதாகைகள் ஏந்தி பள்ளி மாணவ மாணவிகள் பேரணியில் முழக்கமிட்டு சைபர் குற்றம் குறித்து புகார் தெரிவிக்கும் இலவச தொலைபேசி எண்ணான 1930 பொறித்த பதாகைகள் ஏந்தி பேரணியாக சென்றனர். காமராஜ் கல்லூரி, மாணவ மாணவிகள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.

Date
Feb 17 2024
Expired!
Time
10:30 am

Leave A Reply