FACE Prep
காமராஜ் கல்லூரி, பேஸ் பெரெப் (FACE Prep) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கையெழுத்திட்டுள்ளது.
இவ்வொப்பந்தப்படி, நமது கல்லூரியில் பயிலும் BCA மாணவர்களுக்கு நூறு (100%) சதவீதம் வேலைவாய்ப்புக்கு உறுதி அளிக்கும் வகையில் FACE Prep நிறுவனம் பல்வேறு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தி, மாணவர்களை முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றிட ஏதுவாக திறன் மேம்பாடு செய்திடும்.
பல்கலைக்கழக பாடத்திட்டத்தோடு இணைந்த இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள், முதல் பருவத்தில் தொடங்கி ஒவ்வொரு பருவத்திலும் நடத்தப்படும். இரண்டாம் ஆண்டில் ஊக்கத்தொகையுடன் கூடிய Internship வழங்க ஏற்பாடு செய்யப்படும். மூன்றாம் ஆண்டில் தலைசிறந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்திட ஏதுவான திறன்களை வளர்க்கும் விதமாக Artificial Intelligence, Data Science மற்றும் Full stack development போன்ற பயிற்சிகள் வழங்கப்படும். பயிற்சி சான்றிதழை Microsoft, IBM போன்ற நிறுவனங்களிலுருந்து பெற்றுக்கொள்ள வழி வகை செய்யப்படும்.
மேலும் இந்நிறுவனம், பன்னாட்டு நிறுவனங்களை நமது கல்லூரிக்கே அழைத்து வந்து வளாக நேர்காணலுக்கும் (Campus Placement) ஏற்பாடு செய்திடும் வகையில் இவ்வொப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.